SARANAM AYYAPPA

SARANAM AYYAPPA

ஐயப்பன் அருள் உண்டு என்றும் பயமில்லை

ஐயப்பன் அருள் உண்டு என்றும் பயமில்லை
போவோம் சபரிமலை
அந்த ஆதிசிவன் மைந்தன் ஐயப்பன்
என்றும் பக்தரைக் காப்பவனே
ஐயப்பா சரணம் ஐயப்பா

அழுதையில் மூழ்கி கல்லும் எடுத்து
கல்லிடம் குன்று வந்தோம்
அந்த கல்லிடம் குன்று வந்தோம்
அந்த கல்லிடம் குன்றில் கல்லினைப் போட்டு
சபரிமலை ஏறி வந்தோம்
ஐயப்பா சரணம் ஐயப்பா

பொன்னம்பலத்தில் தை மாதத்தில்
ஜோதியாய் காட்சி தந்தாய்
எங்கள் எண்ணம் பலித்தது மனமும் நிறைந்தது
மணிகண்ட பெருமானே

பந்தள நாட்டின் ராஜகுமாரா பஞ்சகிரி வாசா
சந்தனம் வைத்து வந்தனம் செய்தோம்
சபரிமலை நாதா சபரிமலை நாதா