சரணம் பாடுவோம்
சாமி சரணம் பாடுவோம்
சபரி நாதனை போற்றி
சரணம் பாடுவோம்
வான் மழை மேகம் - வந்து
பூ மழை தூவும்
ஐயன் தாமரை பாதம்
அது தருமத்தின் கூடம்
பால் அபிஷேகம்
கண்டால் பாவங்கள் தீரும்
என்றும் நெய் அபிஷேகம்
கண்டால் நிம்மதி சேரும்
மாமலை தோறும் - எங்கள்
மணிகண்டன் நாதம்
அவன் தாழ் பணிந்தோதும்
நெஞ்சம் தூய்மையில் வாழும்
ஆலய தீபம் நின்று
ஆறுதல் கூறும்
அவன்
கோமள ரூபம்