SARANAM AYYAPPA

SARANAM AYYAPPA

சரணமே சரணம் பொன்னையப்பா

சரணமே சரணம் பொன்னையப்பா
ஐயப்பா சரணம் சரணம் பொன்னையப்பா
பாத தரிசனம் தரவேண்டும் - நீ
சபரிநாதன் அழகை எழுதி
மனதிலே தியானம்
ஜெபித்து வந்தால் கிடைக்கும்
நமக்கு சகல செளபக்கியம்

ரத்னாபீடம் கங்கா ஸ்நானம் அர்ச்சனை தீபம்
குத்துக் கால்கள் பதித்த கோலம் குண்டலியோகம்
குத்துக் கால்கள் பதித்த கோலம் குண்டலியோகம்

தேனும் பாலும் நெய்யும் வழிய மேனி அபிஷேகம்
தேனும் பாலும் நெய்யும் வழிய மேனி அபிஷேகம்
சொர்ணபுஷ்பம் பீதாம்பரத்துடன் சர்வ ஆபரணம்

குளிர்ந்த  சந்தனம் திலகம் குங்குமம் மலர் மாலைகளால்
சிவவிஷ்ணுவின் புதல்வனுக்கு செண்டு அலங்காரம்
பூபமாரத்தில் நெய்வேத்யம் சுகந்த தாம்பூலம்
பூபமாரத்தில் நெய்வேத்யம் சுகந்த தாம்பூலம்

கானம் நாட்டியம் வெஞ்சாமரம் மணக்கும் சாஷ்டாங்கம்
கானம் நாட்டியம் வெஞ்சாமரம் மணக்கும் சாஷ்டாங்கம்
ஓங்கார உருவம் இணைந்து அன்பு உபசாரம்
சாமி சரணம் எனும் மந்தரம் ஜென்மம் சாபல்யம்