சாமி திந்தங்கதோம் - தோம்
ஐயப்ப திந்தங்கதோம் - தோம்
ஐயப்ப திந்தங்கதோம் - தோம்
சாமி திந்தங்கதோம் - தோம்
காடுமலையை கடந்து வந்தோம் சாமிமார்களே -
அவன்
காவலிருக்கு கவலை எதுக்கு சேர்ந்து வாங்களே
மாடு மனையும் சொந்தமும் பந்தமும் கூடவே வந்திடுமோ
- நம்ம
மணிகண்ட சாமி தந்திடும் நிம்மதி
மற்றது தந்திடுமோ சாமி அர்ச்சனை செய்திடுவோம்
கரடி புலியும் சிங்கமும் யானையும் கண்டு
வழி ஒதுங்கும் - வேறு எங்கு இது நடக்கும்
கல்லும் முள்ளும் பஞ்சணையாகும்
காட்சியிருக்கும் - அவன் ஆட்சி தந்திருக்கும்
வழி நெடுகிலும் ஐயப்ப சாமி பக்கத் துணையிருக்கும்
வழி நெடுகிலும் ஐயப்ப சாமி பக்கத் துணையிருக்கும்
சபரிமலையில் சத்திய ஜோதி வாவென்று அழைக்கும்
நல்ல வாழ்க்கையைக் கொடுக்கும்
நல்ல வாழ்க்கையைக் கொடுக்கும்
பம்பை நதியில் மூழ்கி குளித்த பின் பாவமெல்லாம்
பறக்கும் கஷ்டம் பட்டதெல்லாம் மறக்கும்
பந்தளன் பிள்ளையின் பால்முகம் பார்த்தபின்
எந்தக்
குறை இருக்கும் மனம் எண்ணி எண்ணி துதிக்கும்
பதினெட்டுப் படிகள் ஏறி முடித்ததும் நினைத்தது
நடக்கும்
பதினெட்டுப் படிகள் ஏறி முடித்ததும் கேட்டது
நடக்கும்
மகரஜோதியை கண்டபின் நமக்கு மகிழ்சியே பிறக்கும்
சுபமங்களத்தை கொடுக்கும் சுபமங்களத்தை கொடுக்கும்
சாமி திந்தங்கதோம் - தோம்
ஐயப்ப திந்தங்கதோம் - தோம்
ஐயப்ப திந்தங்கதோம் - தோம்
சாமி
திந்தங்கதோம் – தோம்