SARANAM AYYAPPA

SARANAM AYYAPPA

எங்கே மணக்குது சந்தனம் எங்கே மணக்குது

சாமி ஐயப்பா - சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா - சாமி ஐயப்பா
சாமியே ஐயப்பா - ஐயப்பா சாமியே
சாமியே ஐயப்பா - ஐயப்பா சாமியே

எங்கே மணக்குது சந்தனம் எங்கே மணக்குது
ஐயப்பசாமி கோவிலிலே சந்தனம் மணக்குது
என்ன மணக்குது மலையில் என்ன மணக்குது
இன்பமான ஊதுவத்தி அங்கே மணக்குது

எங்கே மணக்குது நெய்யும் எங்கே மணக்குது
வீரமணி கண்டன் சன்னதியில் நெய்யும் மணக்குது
திருநீறும் மணக்குது பன்னீரும் மணக்குது
ஆண்டவனின் சன்னதியில் அருளும் மணக்குது
ஐயப்பன்மார்கள் உள்ளத்திலே அன்பு மணக்குது

பள்ளிக்கட்டை சுமந்துகிட்டா பக்தி பிறக்குது
அந்தப்பனிமலையில் ஏரிடவே சக்தி பிறக்குது
பகவானைப் பார்த்துவிட்டா பாவம் பறக்குது
பதினெட்டாம் படிதொட்டால் வாழ்வும் இனிக்குது

பேட்டை துள்ளி ஆடும் போது மனமும் துள்ளுது
ஐயன் பேரழகைக் காண உள்ளம் ஆசை கொள்ளுது
காட்டுக்குள்ளே சரணகோஷம் வானைப் பிளக்குது
வீட்டை மறந்து பக்தர் கூட்டம் காட்டிலிருக்குது

பூங்காவனத் தோப்புக்குள்ளே பவனி வருகிறான்
வேங்கையின் மேல் ஏறி வந்து வரமும் கொடுக்கிறான்
நோன்பிலிருந்து வருவோரைத் தாங்கி நிற்கிறான்

ஓங்கார நாதத்திலே எழுந்து வருகிறான்.