SARANAM AYYAPPA

SARANAM AYYAPPA

ஐயப்பன் அருள் உண்டு என்றும் பயமில்லை

ஐயப்பன் அருள் உண்டு என்றும் பயமில்லை
போவோம் சபரிமலை
அந்த ஆதிசிவன் மைந்தன் ஐயப்பன்
என்றும் பக்தரைக் காப்பவனே
ஐயப்பா சரணம் ஐயப்பா

அழுதையில் மூழ்கி கல்லும் எடுத்து
கல்லிடம் குன்று வந்தோம்
அந்த கல்லிடம் குன்று வந்தோம்
அந்த கல்லிடம் குன்றில் கல்லினைப் போட்டு
சபரிமலை ஏறி வந்தோம்
ஐயப்பா சரணம் ஐயப்பா

பொன்னம்பலத்தில் தை மாதத்தில்
ஜோதியாய் காட்சி தந்தாய்
எங்கள் எண்ணம் பலித்தது மனமும் நிறைந்தது
மணிகண்ட பெருமானே

பந்தள நாட்டின் ராஜகுமாரா பஞ்சகிரி வாசா
சந்தனம் வைத்து வந்தனம் செய்தோம்
சபரிமலை நாதா சபரிமலை நாதா


சரணமே சரணம் பொன்னையப்பா

சரணமே சரணம் பொன்னையப்பா
ஐயப்பா சரணம் சரணம் பொன்னையப்பா
பாத தரிசனம் தரவேண்டும் - நீ
சபரிநாதன் அழகை எழுதி
மனதிலே தியானம்
ஜெபித்து வந்தால் கிடைக்கும்
நமக்கு சகல செளபக்கியம்

ரத்னாபீடம் கங்கா ஸ்நானம் அர்ச்சனை தீபம்
குத்துக் கால்கள் பதித்த கோலம் குண்டலியோகம்
குத்துக் கால்கள் பதித்த கோலம் குண்டலியோகம்

தேனும் பாலும் நெய்யும் வழிய மேனி அபிஷேகம்
தேனும் பாலும் நெய்யும் வழிய மேனி அபிஷேகம்
சொர்ணபுஷ்பம் பீதாம்பரத்துடன் சர்வ ஆபரணம்

குளிர்ந்த  சந்தனம் திலகம் குங்குமம் மலர் மாலைகளால்
சிவவிஷ்ணுவின் புதல்வனுக்கு செண்டு அலங்காரம்
பூபமாரத்தில் நெய்வேத்யம் சுகந்த தாம்பூலம்
பூபமாரத்தில் நெய்வேத்யம் சுகந்த தாம்பூலம்

கானம் நாட்டியம் வெஞ்சாமரம் மணக்கும் சாஷ்டாங்கம்
கானம் நாட்டியம் வெஞ்சாமரம் மணக்கும் சாஷ்டாங்கம்
ஓங்கார உருவம் இணைந்து அன்பு உபசாரம்
சாமி சரணம் எனும் மந்தரம் ஜென்மம் சாபல்யம்


சாமி திந்தங்கதோம் - தோம்

சாமி திந்தங்கதோம் - தோம்
ஐயப்ப திந்தங்கதோம் - தோம்
ஐயப்ப திந்தங்கதோம் - தோம்
சாமி திந்தங்கதோம் - தோம்

காடுமலையை கடந்து வந்தோம் சாமிமார்களே - அவன்
காவலிருக்கு கவலை எதுக்கு சேர்ந்து வாங்களே
மாடு மனையும் சொந்தமும் பந்தமும் கூடவே வந்திடுமோ - நம்ம
மணிகண்ட சாமி தந்திடும் நிம்மதி
மற்றது தந்திடுமோ சாமி அர்ச்சனை செய்திடுவோம்
கரடி புலியும் சிங்கமும் யானையும் கண்டு
வழி ஒதுங்கும் - வேறு எங்கு இது நடக்கும்
கல்லும் முள்ளும் பஞ்சணையாகும்
காட்சியிருக்கும் - அவன் ஆட்சி தந்திருக்கும்
வழி நெடுகிலும் ஐயப்ப சாமி பக்கத் துணையிருக்கும்
வழி நெடுகிலும் ஐயப்ப சாமி பக்கத் துணையிருக்கும்
சபரிமலையில் சத்திய ஜோதி வாவென்று அழைக்கும்
நல்ல வாழ்க்கையைக் கொடுக்கும்
நல்ல வாழ்க்கையைக் கொடுக்கும்

பம்பை நதியில் மூழ்கி குளித்த பின் பாவமெல்லாம்
பறக்கும் கஷ்டம் பட்டதெல்லாம் மறக்கும்
பந்தளன் பிள்ளையின் பால்முகம் பார்த்தபின் எந்தக்
குறை இருக்கும் மனம் எண்ணி எண்ணி துதிக்கும்
பதினெட்டுப் படிகள் ஏறி முடித்ததும் நினைத்தது நடக்கும்
பதினெட்டுப் படிகள் ஏறி முடித்ததும் கேட்டது நடக்கும்
மகரஜோதியை கண்டபின் நமக்கு மகிழ்சியே பிறக்கும்
சுபமங்களத்தை கொடுக்கும் சுபமங்களத்தை கொடுக்கும்

சாமி திந்தங்கதோம் - தோம்
ஐயப்ப திந்தங்கதோம் - தோம்
ஐயப்ப திந்தங்கதோம் - தோம்
சாமி திந்தங்கதோம் – தோம்

அன்னதனப் பிரபுவே சரணம் ஐயப்பா

அன்னதனப் பிரபுவே சரணம் ஐயப்பா
ஆரியங்காவு ஐயனே சரணம் ஐயப்பா
உன்னடியைப் பணிந்து நின்றோம்
சரணம் பொன் ஐயப்பா
கண்ணனின் மைந்தனே சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா சாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா சாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா சாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா சாமி சரணம் ஐயப்பா
வன்புலிமேல் அமர்ந்தவனே சரணம் ஐயப்பா
வாவர்சாமி தோழனே சரணம் ஐயப்பா
இன்னல்யாவும் தீர்ப்பவனே சரணம் பொன் ஐயப்பா
ஈசனின் செல்வனே சரணம் பொன் ஐயப்பா
சரணம் ஐயப்பா சாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா சாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா சாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா சாமி சரணம் ஐயப்பா
எருமேலி சாஸ்தாவே சரணம் பொன் ஐயப்பா
ஏழைப்பங்காளனே சரணம் பொன் ஐயப்பா
அறிந்தும் அறியாமலும் செய்த பிழைதன்னை
பொறுத்தருள்வாய் நீ சரணம் பொன் ஐயப்பா


அருள் மணக்கும் ஆண்டவனே ஐயப்பா

அருள் மணக்கும் ஆண்டவனே ஐயப்பா
ஆதி ஞான ஜோதியப்பா ஐயப்பா
இருக்கும் வாழ்வை சிறக்க வைக்கும் ஐயப்பா
ஈர்க்கும் காந்தமலையப்பா ஐயப்பா

உள் ஒளியைத் தோற்றுவிக்கும் ஐயப்பா
ஊறிவரும் உணர்வடக்கம் ஐயப்பா
என்னை உன்னுடன் நெருங்க வைத்த ஐயப்பா
ஏகநிலை ஏறவைத்தாய் ஐயப்பா

அருள் மணக்கும் ஆண்டவனே ஐயப்பா
ஆதி ஞான ஜோதியப்பா ஐயப்பா
இருக்கும் வாழ்வை சிறக்க வைக்கும் ஐயப்பா
ஈர்க்கும் காந்தமலையப்பா ஐயப்பா

ஐம்புலனாம் புவிவெல்லும் ஐயப்பா
ஐயம் தீர்க்கும் தெய்வம் ஐயப்பா
ஒருமையுள்ளம் குடியிருக்கும் ஐயப்பா
ஓங்கும் மலை வேந்தனப்பா ஐயப்பா
ஒளவைக்குறள் யோகம் கொண்ட ஐயப்பா

செவ்வேளின் மணிகண்டா ஐயப்பா

சரணம் பாடுவோம் சாமி சரணம் பாடுவோம்

சரணம் பாடுவோம்
சாமி சரணம் பாடுவோம்
சபரி நாதனை போற்றி
சரணம் பாடுவோம்

வான் மழை மேகம் - வந்து
பூ மழை தூவும்
ஐயன் தாமரை பாதம்
அது தருமத்தின் கூடம்

பால் அபிஷேகம்
கண்டால் பாவங்கள் தீரும்
என்றும் நெய் அபிஷேகம்
கண்டால் நிம்மதி சேரும்

மாமலை தோறும் - எங்கள்
மணிகண்டன் நாதம்
அவன் தாழ் பணிந்தோதும்
நெஞ்சம் தூய்மையில் வாழும்
ஆலய தீபம் நின்று
ஆறுதல் கூறும்
அவன் கோமள ரூபம்

எங்கே மணக்குது சந்தனம் எங்கே மணக்குது

சாமி ஐயப்பா - சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா - சாமி ஐயப்பா
சாமியே ஐயப்பா - ஐயப்பா சாமியே
சாமியே ஐயப்பா - ஐயப்பா சாமியே

எங்கே மணக்குது சந்தனம் எங்கே மணக்குது
ஐயப்பசாமி கோவிலிலே சந்தனம் மணக்குது
என்ன மணக்குது மலையில் என்ன மணக்குது
இன்பமான ஊதுவத்தி அங்கே மணக்குது

எங்கே மணக்குது நெய்யும் எங்கே மணக்குது
வீரமணி கண்டன் சன்னதியில் நெய்யும் மணக்குது
திருநீறும் மணக்குது பன்னீரும் மணக்குது
ஆண்டவனின் சன்னதியில் அருளும் மணக்குது
ஐயப்பன்மார்கள் உள்ளத்திலே அன்பு மணக்குது

பள்ளிக்கட்டை சுமந்துகிட்டா பக்தி பிறக்குது
அந்தப்பனிமலையில் ஏரிடவே சக்தி பிறக்குது
பகவானைப் பார்த்துவிட்டா பாவம் பறக்குது
பதினெட்டாம் படிதொட்டால் வாழ்வும் இனிக்குது

பேட்டை துள்ளி ஆடும் போது மனமும் துள்ளுது
ஐயன் பேரழகைக் காண உள்ளம் ஆசை கொள்ளுது
காட்டுக்குள்ளே சரணகோஷம் வானைப் பிளக்குது
வீட்டை மறந்து பக்தர் கூட்டம் காட்டிலிருக்குது

பூங்காவனத் தோப்புக்குள்ளே பவனி வருகிறான்
வேங்கையின் மேல் ஏறி வந்து வரமும் கொடுக்கிறான்
நோன்பிலிருந்து வருவோரைத் தாங்கி நிற்கிறான்

ஓங்கார நாதத்திலே எழுந்து வருகிறான். 

சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா


ஹரிவராசனம் விஸ்வமோகனம்
ஹரிததீஸ்வரம் ஆராத்யபாதுகம்
அரிவிமர்தனம் நித்யநர்த்தனம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே

சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா
சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா

சரணகீர்த்தனம் சக்தமானசம்
பரணலோலுபம் நர்த்தனாலஸம்
அருணபாஸுரம் பூதநாயகம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே

சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா
சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா

ப்ரணயஸத்யகம் ப்ராணநாயகம்
ப்ரணதகல்பகம் ஸுப்ரபாஞ்சிதம்
ப்ரணவமந்திரம் கீர்த்தனப்ரியம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே

சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா
சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா

துரகவாகனம் ஸுந்தரானனம்
வரகதாயுதம் வேதவ-வர்ணிதம்
குருக்ருபாகரம் கீர்த்தனப்ரியம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே

சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா
சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா

த்ரிபுவனார்சிதம் தேவதாத்மகம்
த்ரனயனப்ரபும் திவ்யதேசிகம்
த்ரிதசபூஜிதம் சிந்திதப்ப்ரதம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே

சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா
சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா

பவபயாவஹம் பாவகாவுகம்
புவனமோகனம் பூதிபூஷணம்
தவளவாஹனம் திவ்யவாரணம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே

சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா
சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா

களம்ருதஸ்மிதம் ஸுந்தரனானம்
களபகோமளம் காத்ரமோஹனம்
களபகேசரி வாஜிவாஹனம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே

சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா
சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா

ச்ரிதஜனப்ரியம் சிந்திதப்ரதம்
ச்ருதிவிபூஷணம் ஸாதுஜீவனம்
ச்ருதிமனோகரம் கீதலாலஸம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே

சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா
சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா